JBC ride to Yelagiri (2025)
ஏலகிரி என்றவுடன் இதெல்லாம் நமக்கு இல்லை என்று நினைத்தேன்.பின்னர் இது JBC supported என்பதால் முயற்சி செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.
அசோக் பில்லர் நண்பர்கள் மற்றும் அஸ்வின் இருக்கிற தைரியம்.
தன்னார்வலர்கள் பட்டியலில் Stephen பார்த்தவுடன் மேலும் புத்துணர்வு.
இரயில் நிலையத்தில் MSK, Padma Subbu பார்த்தவுடன் புது தெம்பு வந்தது. இரயில் நிலையம் இரங்கிய பின்னர் NG , சரி இனி கவலை இல்லை என்று தொடங்கி விட்டேன்.
முதல் முறையாக மிதிவண்டியில் மலைப் பயணம் மலைப்பாய் இருந்தாலும் மிதிக்க துவங்கியது உற்சாகம் தந்தது.முதல் மூன்று கொன்டை வளைவுகள் ஏறியப்பின் Cramps லேசாக வர Fast up Reload ஏன் வேலை செய்யவில்லை என்று யோசித்து கொண்டு நான்காம் கொண்டை வளைவில் உள்ள pitstop வந்து சேர்ந்தேன்.வாழைப்பழம், கடலை மிட்டாய் முழுங்கி விட்டு அடுத்த pitstop 9th hairpin bend நோக்கி மிதிக்க தொடங்கினேன். இன்னும் ஒரு கியர் இருந்தால் நல்லா இருக்கும் போல் இருந்தது.
10 hairpin bend வந்தவுடன் Stephen பார்த்து மகிழ்ந்தேன்.புகைப்படம் எடுத்து கொண்டோம்.நிறைய Chocolates , எதற்க்கும் இருக்கட்டும் என்று ஒரு ors pocketல் சொருகி இன்னும் நான்கு கொண்டை வளைவு கள் தான் எப்படியும் ஏறி விடலாம் என்று தொடர்ந்தேன். 11 வது வளைவில் NG , Ken, Cliff பார்த்தது புகைப்படங்கள் எடுத்தது நினைவில் நிற்கும் அனுபவம். Ken கொடுத்த lemon juice with salt இரண்டு வாய் பருகியது அமிர்தம் போல இருந்தது.
இனி one hair pin bend at a time என்று முடிவு செய்து பயணித்தேன்
MSK and Padma மேல ஏறிவிட்டு மீண்டும் Loop அடித்து எங்களை உற்சாகப்படுத்தினர். ஒரு வழியாக 12 , 13 கடந்து இன்னும் எவ்வளவு தூரம் என்று அமர்ந்த போது அவ்வளவு தான் Sir நீங்கள் அமர்ந்து இருப்பது 14 வது கொண்டை வளைவு என்று கேட்டதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி,
சில நிமிடங்களில் I love Yelagiri selfi point.
இறைவா உமக்கு நன்றி என்று யாத்திரி நிவாஸ் வந்து சேர்ந்தேன்.
The trip was well organised by JBC Spl thanks to Mr. Shivakumar
Vijaya Kumar, Pratap Antony and others.
My Special Congratulations to the trio of Ansiya, Ken and Kalpana, your resilence and demeanour was something to cherish.
Prathap Antony, you went an extra mile to make this trip memorable with the daily off road trips and visit to the view points .
Thanks @Jayakanth for the lovely clicksThanks friends and fellow riders this trip will be etched in my memory.
The descent was a thrilling experience , I started early with Aswin and we touched down in 22 minutes
@🇳🇮🇰🇭🇮🇱🇵🇦🇺🇱 @Yunus⚡️ @Aswinkumar K WCCG @Jayakanth @Surya WCCG @Padma Kumar WCCG @~MSK SREENIVASAN @Stephen Isr @Vijaya Kumar JBC @Prathap Antony JBC @Kalpana Kathirvelu @Kathirvelu JBC Yercaud @~Shaheen Naiyer @NG
No comments:
Post a Comment