கிறிஸ்துவுக்குள்; அன்பானவர்களே , இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக .
தீர்க்கதரிசகளின் வாக்கிற்கிணங்க பிதாவாகிய தேவனனின் உத்திரவு படி யோவான் யூதேயாவின் வனாந்தரங்களிலே ,யோர்தான் நதிக்கு அப்பால் சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால்,ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்.
சாலிம் ஷாலோம் என்ற வார்த்தையின் மருவு . aenon என்றால் ஊற்று என்று பொருள்படும் .
யோவான் பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தான். அப்பொழுது யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார் உட்பட அவனிடத்திற்குப்போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
இதுவரை புறஜாதியார் யூத மதத்தை தழுவும் போது அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பது வழக்கம் .ஆனால் இங்கே மனம் திரும்புங்கள் தேவனுடைய ராஜ்யம் சமித்திருக்கிறது, மனம் திரும்புதலுக்கேற்ற கனிகளை கொடுங்கள் என்று யோவான் சொன்னவுடன் ஜனங்கள் அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். யோவானும் பொருளாசை கொள்ளாதீர்கள் ,லஞ்சம் வாங்காதீர்கள் , ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும் சம்பளமே போதுமென்றும் இருங்கள் உட்பட வேறு அநேக புத்திமதிகளையும் ஜனங்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான் அதன் பின்பு அவர்களை யோர்தானில் முக்கி எடுத்தான் .அதனால் அவனுக்கு யோவான் ஸ்னானகன் என்ற பட்ட பெயர் கிடைத்தது . John the Baptist, john the Plunger ,John the Dipper என்று அழைக்கப்பட்டான் .
Baptism என்ற ஆங்கில சொல் Baptizo என்ற கிரேக்க சொல்லின் ஓலி பெயர்ப்பு அதாவது Transliteration ஆகும் மொழி பெயர்ப்பு அல்ல Its not a Translation but a transliteration .இந்த சொல் கிரேக்கத்திலே ஒரு திட பொருளை திரவத்திலே முக்கி எடுப்பதை குறிக்கும் . உதாரணமாக ஒரு துணியை சாயத்திலே முக்கி எடுப்பதை , கப்பல் நீரில் மூழ்குவதை ஒரு குவளையை தண்ணீர் தொட்டியில் முக்கி தண்ணீர் எடுப்பதை குறிப்பிட கிரேக்கர்கள் தங்களது அன்றடைய வழக்கத்தில் இந்த சொல்லை பயன்படுத்தினர்
இன்றைக்கும் சரி ஒருவன் கிறிஸ்தவன் ஆக வேண்டுமானால் முதலில் அவன் செய்ய வேண்டியது மனம் திரும்புதல் . இதனால் தான் யோவான் ஸ்னானகன் , இயேசு கிருஸ்து , அப்போஸ்தலனாகிய பவுல் ,பேதுரு முதலியோர் மனம் திரும்புங்கள் என்ற தீர்க்கமான அழைப்புடனே தங்கள் ஊழியத்தை ஆரம்பித்தனர் . கிரேக்கத்திலே metanoea என்றால் மனமாற்றம் என்று அர்த்தம் ,எபிரேயத்திலே Teshuvah இதில் shuv என்றால் திரும்பு என்று அர்த்தம் .இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி திரும்புதல் ,பிசாசிடம் இருந்து ஆண்டவரை நோக்கி திரும்புதல் ,பாவத்தில் இருந்து பரிசுத்தத்தை நோக்கி திரும்புதல் மட்டும் அல்ல நமது சொற்களிலும் செயல்களிலும் ஒரு மாற்றத்தையே வேதம் மனம் திரும்புதல் என்று கூறுகிறது .
தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது. இவ்வாறு தவறை நினைத்து வருந்துவது மட்டும் இன்றி அதனை மீண்டும் செய்யாமல் நிறுத்தி கொள்வது தான் மனம் திரும்புதலுக்கேற்ற கனி கொடுத்தல் . Repentance is not only feeling sorry but feeling sorry enough to stop. இது நமது எண்ணம் வாக்கு செயல் மூன்றும் தொடர்புடையது Thought word and Action
மனம் திரும்புதலை பார்த்தோம் இனி பாவ மன்னிப்பை குறித்து பார்ப்போம். பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான் அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனே இரக்கம் பெறுவான் .எனவே மனம் திரும்புதலுக்கு பின் பெறும் ஞானஸ்னானம் பாவ மன்னிப்பிற்கும் ஏற்றதாய் இருக்கிறது .எனவே தான் நிசேயா விசுவாச பிரமானத்தில் பாவ மன்னிப்பிற்கு என்று நியமிக்க பட்டிருக்கிற ஒரே ஞானஸ்னானம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது . இவ்வாறு யோவான் பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான். அப்பொழுது யூதேயா தேசத்தார் அவனிடத்திற்குப்போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்தெழுதலுக்கு பின்பு ஞானஸ்னானம் ஒரு கிறிஸ்தவன் தனது பழைய வாழ்க்கைக்கு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு இயேசு உயிர்தெழந்தது போல புதிய மனுஷனாக மீண்டும் பிறப்பதையும் குறிக்கிறது இதனை நாம் ரோமர் 6 மற்றும் கொலோசெயர் 2இல் காணலாம். ஒரு உண்மை சம்பவத்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன் .இங்கிலாந்து தேசத்தில் பள்ளி இறுதி வகுப்பில் தன்னோடு 20 ஆண்டுகளுக்கு முன்னாள் படித்த நண்பனை தேட ஒருவன் முற்பட்டான் . இந்த காலம் போல் facebook வாட்ஸாப்ப் கிடையாது அதினால் இவர் ஒரு குறி சொல்பவரின் உதவியை நாடுகிறார் . அவரும் பல மணி நேர முயற்சிக்கு பின்னர் இவரது நண்பர் லண்டன் நகரத்தில் இந்த விலாசத்தில் வசித்து வந்ததாகவும் பின்னர் 7 ஆண்டுக்கு முன்னர் இந்த தேதியில் மறித்து விட்டதாகவும் கூறினார் .சரி அவரது குடும்பத்தினரையாவது காணலாமே என்று லண்டன் சென்று கதவை தட்டிய இவருக்கு பெரும் அதிர்ச்சி இவரது நண்பர் கையில் வேதா புஸ்தகத்துடன் கதவை திறக்கிறார் .நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறார் இதை கேட்டவுடன் அந்த நண்பர் அதிர்ந்தார் உள்ளே சென்று தனது டைரியை எடுத்து இவர் மரித்ததாக குறி சொன்னவர் சொன்ன தேதியும் இவர் மனம் திரும்பி இயேசுவை விசுவாசித்து ஞானஸ்னானம் பெற்ற தேதியும் ஒன்றாக இருந்தது . ஞானஸ்னானம் இவ்வாறு நமக்கு பாவ மன்னிப்பையும் ,பாவத்தின் பிடியில் இருந்து விடுதலையும் அதாவது மீட்பையும் ஒரு வெற்றி வாழ்க்கையும் வழங்குகிறது .
மேலும் இயேசு கிறிஸ்துவை குறித்த விசுவாசம் ஞானஸ்னானத்திற்கு அவசியம் : பவுல் அப்போஸ்தலர் 19 இல் யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்கிறார் .யோவான் : என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல யூத மக்கள் அமர்ந்து குறைந்த அளவு உயரம் கொண்ட மேஜையில் ஒரு கையை ஊன்றி மறு கையினால் உணவு அருந்தும் வழக்கம் கொண்டவர் எனவே அவர்கள் உணவருந்தும் போடு ஒருவரது கால் மற்றொருவரது முகத்திற்கு நேராக இருக்கும் எனவே நாம் உணவருந்த முன் கைய் கழுவுவது போல அவர்கள் கையுடன் கால்களையும் கழுவும் வழக்கம் யுடைவர்கள் . வசதி படைத்தவர்கள் இதற்கென அடிமைகளையும் வைத்திருந்தனர் . அடிமைகள் வரிசையில் கடைசிக்கு முன்பானவன் எஜமானின் பட ரட்சையை அவிர்ப்பான் கடைசி அடிமை எஜமானின் கால்களை கழுவுவான் . யோவான் தான் இயேசுவின் பட ரட்சையை அவிழ்க்க கூட பத்திரவான் அல்லலை என்கிறார் . ஆனால் யேசுவோ தனது சீடர்களின் கால்களை கூட கழுவினார் .
இன்னொரு முக்கியமான காரியம் மனம் திரும்புதல் பாவ மன்னிப்பு , யேசுகிருஸ்துவை பற்றும் விசுவாசம் மட்டும் அல்லாமல் பரிசுத்த ஆவியானவரை பெற்று கொள்ளவும் இது வகை செய்கிறது இதனை பேதுரு அப்போஸ்தலர் 2 ல் நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள் என்று குறிப்பிடுகிறார் .
யோவானும் .நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித்தான். ஜலத்தினால் ஞானஸ்னானம் எந்த ஒரு விசுவாசியும் கொடுக்கலாம் அனால் பரிசுத்த ஆவியால் ஞானஸ்னானம் கொடுக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவராலேயே முடியும் .பழைய மனுஷனின் அடக்க ஆராதானையாக தண்ணீரினால் பெரும் ஞானஸ்னானமும் கிறிஸ்துவுக்குள் உள்ள புதிய மனுஷனின் வெற்றி வாழ்க்கைக்கு பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்னானமும் அத்தியாவசியம் ஆகிறது .
ஒரு கிருஸ்தவனுக்கு இந்த இரண்டு ஞானஸ்னானமும் அவசியம். எனவே தான் அப்போஸ்தலர் 8 இல் பேதுருவும் யோவானும் சமாரியர்கள் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்.
கொர்நேலியுவின் வீட்டில் பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதாபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான்.
மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ?
கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ?
பொல்லாதோர் கூட செய்திடார்
நற்பிதா நலம் அருள்வார்
பொல்லாதவர்களாகிய நாம் நமது பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
ஒரு வேண்டுகோள் ,ஞானஸ்னானம் கிருஸ்துவர்களிடம் பிரிவினை உண்டாக்க கூடாது , இதை கொண்டு மார்க்க பேதங்கள் உங்களை விட பரிசுத்தர் நாங்கள் என்ற மேட்டிமை .Holier than thou attitude தவிர்க்க பட வேண்டும் . வேதமே நமக்கு வெளிச்சம் வழிகாட்டுதல் அளவுகோல் அனைத்துமே .எனவே அவரவர் வேதத்தின் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவோடு கலந்துரையாடி முடிவு எடுக்க வேண்டும் . ஞானஸ்னானத்தை குறித்த உபதேசங்களில் நாம் என்ன செய்கிறோம் என்பதை விட கடவுள் என்ன செய்கிறார் என்பதற்கே முக்கியத்துவம் கொடுத்தால் அவசியம் .
அதே சமயத்தில் ஞானஸ்னானத்தை குறித்த உபதேசத்தை அற்பமாய் என்ன கூடாது ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது; யோவான் பிதாவாகிய தேவனனின் உத்திரவு படியே இந்த பணியை செய்தார் ,ஏசுவானவரும் யோவானின் ஞானஸ்னானத்தை அங்கீகரித்தது மட்டும் அல்லாது தாமும் தம்முடைய சீஷர்கள் மூலம் இதனை செய்து வந்தார் . மாற்கு 16:16 இல் இயேசு விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான் என்கிறார் .
மேலும் மத்தேயு 28 இல் தமது பிரதான கட்டளையில் வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.சிந்தியுங்கள் செயல்படுங்கள் .
No comments:
Post a Comment